வைக்கோல் போர் எரிந்து ரூ.6 லட்சம் சேதம்


வைக்கோல் போர் எரிந்து ரூ.6 லட்சம் சேதம்
x
திருப்பூர்


அலங்கியம் சாலையில் வைக்கோல் போர் தீ பிடித்ததில் ரூ.6 லட்சம் சேதம் அடைந்தது.

வைக்கோல் போரில் தீ

தாராபுரம் அருகே அலங்கியம் சாலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையோர குப்பையை அகற்றினர். அப்போது குப்பை அகற்றுவதற்காக தீ வைத்ததாக தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக காற்றில் பறந்த தீ அருகில் உள்ள வைக்கோல் போரில் பட்டு தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து வைக்கோல் வைத்திருந்த தோட்ட உரிமையாளர் பெரியநாயகி தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

ரூ.6 லட்சம் சேதம்

இதுகுறித்து பெரிய நாயகி தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார் அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் 6 மாடுகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன். தோட்டத்தில் மாடுகளுக்கு தீவனமாக வைக்கோல் மற்றும் சோளத்தட்டு ஆகியவற்றை ரூ.6 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி போர் வைத்து பாதுகாத்து வந்தேன்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் 1.30 மணியவில் தோட்டத்தில் அமைத்துள்ள மாட்டு கட்டுத்தரை மற்றும் வகைக்கோல்போர் அருகில் அப்பகுதி மக்கள் குப்பைகளை குவித்து வந்தனர். கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் அவற்றை அப்புறப்படுத்தாமல் தீ வைத்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் தீ குப்பையில் கொழுந்துவிட்டு எரிந்தபோது அதன் தீ அருகில் இருந்த வைக்கோல் போர் மற்றும் மாட்டு கட்டுத்தரை சோளத்தட்டு போர் தீயினால் எரித்து சேதம் சேதமாயின. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

எனவே குப்பையை அகற்ற தீவைத்து சுமார் ரூ.6 லட்சம் சேதத்தை ஏற்படுத்திய கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகம் பணியாளர் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளது.


Next Story