தருவைகுளம்அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றம்
தருவைகுளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு திருப்பவனி, சிப்பிக்குளம் பங்குதந்தை டோமினிக் தலைமையில் திருப்பலி, வெள்ளப்பட்டி பங்குதந்தை வினித்ராஜா தலைமையில் மறையுரை நடந்தது. மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் டி.சவேரியார்புரம் பங்குதந்தை குழந்தைராஜன், முரசங்கோடு உதவி பங்குதந்தை பனிமயம் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். வருகிற 28-ந் தேதி முதல் திருஉணவு வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், பொருளாளர் அந்தோணிசாமி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந் தேதி காலை 6 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட், உதவி பங்குதந்தை சஜன், அருட்சகோதரர்கள், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.