ஊட்டி தாவரவியல் பூங்காவை கட்டமைத்த மெக் ஐவரின் 147-வது நினைவு தினம் அனுசரிப்பு


ஊட்டி தாவரவியல் பூங்காவை கட்டமைத்த மெக் ஐவரின் 147-வது நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவை கட்டமைத்த மெக் ஐவரின் 147-வது நினைவு தினம் அனுசரிப்பு

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா விளங்குகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லும் இந்த பூங்காவை 1848-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சார்ந்த மெக் ஐவர் என்ற கட்டிட கலை வல்லுனர் தொடங்கி வைத்தார். 19 ஆண்டுகளுக்கு பிறகு பூங்கா பணிகள் நிறைவடைந்தது. பின்னர் 1867-ம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் பல்வேறு நாடுகளை சார்ந்த 50 வகையான மரங்களும், 250 விதமான மலர் செடிகளும் உள்ளது. இந்த பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் 1876-ம் ஆண்டு ஜூன் 8 - ந்தேதி இறந்தார். அவரது நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று அவரது 147-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனையடுத்து ஊட்டி ஸ்டீபன் சர்ச் வளாகத்தில் அமைந்துள்ள அவரது கல்லறைக்கு நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி மற்றும் உதவி இயக்குனர் பாலசங்கர் உள்ளிட்டோரும் பூங்கா ஊழியர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் ஸ்டீபன் தேவாலய நிர்வாகி அருள் திலகம், பூங்கா அலுவலர் கவின்யா உள்பட பலர் இருந்தனர்.


Next Story