2-வது முறையாக கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
2-வது முறையாக கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
அய்யம்பேட்டை அருகே வடக்குமாங்குடி வெள்ளாள தெருவில் வசித்து வருபவர் அப்துல் மஜீத் (வயது 42). இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதே கார் மீண்டும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீப்பிடித்து எரிந்த காரை பார்வையிட்டு மர்ம நபர்கள் யாராவது காருக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கார் 2 முறை தீப்பிடித்து எரிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.