கரூர் மாவட்டத்தில் 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,611 மையங்களில் நாளை நடக்கிறது


கரூர் மாவட்டத்தில் 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,611 மையங்களில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 19 Aug 2022 7:17 PM GMT (Updated: 19 Aug 2022 7:17 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,611 மையங்களில் நாளை நடக்கிறது

கரூர்

கரூர் மாவட்டத்தில் 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,611 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 12 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் 15 முதல் 18 வயதுடையவர்கள் செலுத்தியவர்கள் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. இவ்வயதுடையவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அரசு நிலையங்களிலேயே 75-வது சுதந்திர தினத்தையொட்டி கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை 75 நாட்களுக்கு இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 2-ம் தவணை தடுப்பூசி போட்ட தேதியிலிருந்து 9 மாத கால அவகாசத்திலிருந்து தற்போது 6 மாத கால அவகாசமாக குறைக்கப்பட்டுள்ளதால் இவர்களும் இத்தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இதேபோல் கரூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டு இன்னும் 2-ம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் மொத்தம் 60,902 பேரும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 5,43,174 பேரும் உள்ளனர். இவர்களும் இம்முகாமை பயன்படுத்தி தங்களது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story