பீரோவில் இருந்த 4 பவுன் நகை திருட்டு
பீரோவில் இருந்த 4 பவுன் நகை மாயமானது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி பாரதிநகரை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (வயது 38). இவர் காரியாபட்டியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வந்துவிட்டு கல்குறிச்சி பாரதிநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் 4 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து பாண்டிச்செல்வி மல்லாங்கிணறு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல சாத்தூர் செல்லியாரம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி பத்மினி. இவரது வீட்டு வாசலில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் பத்மினி கழுத்தில் அணிந்திருந்த 28 கிராம் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.