விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், கலெக்டர் அலுவலக பிரதான நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு கேரளா அரசைபோல் தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணியிடம், விவசாய சங்க பிரதிநிதிகள் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story