சாலையில் நடந்து சென்றவரை வெட்டிய மர்மநபர்கள்


சாலையில் நடந்து சென்றவரை வெட்டிய மர்மநபர்கள்
x

சாலையில் நடந்து சென்றவரை மர்மநபர்கள் வெட்டினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மேல 3-ம் வீதியை சேர்ந்தவர் நஜிமுதீன் (வயது45). இவர் இன்று இரவு ராணியார் அரசு மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், நஜிமுதீனின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர். அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி சென்று ஒருவரை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்தனர். அரிவாள் வெட்டில் நஜிமுதீன் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்ட நபரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். நஜிமுதீன் தலையில் வெட்டியது கத்தியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அவரை வெட்டியதற்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. தப்பியோடிய மர்மநபர்களை பிடிக்க டவுன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story