2 ஆடுகளை திருடி சென்ற ஆசாமிகள்
2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் தாலுகா மேசநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 37). இவர் வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் 2 ஆடுகளை வீட்டு முன்பு கட்டி இருந்தார். அதிகாலையில் ஆடு கட்டி இருக்கும் பகுதியில் சத்தம் கேட்டு வெளியே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடி கொண்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக செந்தில்குமார் திருமங்கலம் தாலுகா ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire