கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு - கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்


கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு - கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்
x

கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பொன்னேரி உதவி கலெக்டர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியையொட்டி தமிழக-ஆந்திர எல்லை பகுதி உள்ளது. இந்த எல்லை பகுதி வழியாக பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து லாரிகளில் மணல் கடத்தல், அரசு மற்றும் தனியார் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தல் என பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை -சத்யவேடு சாலையில் உள்ள ஆந்திர மாநில எல்லையையொட்டிய பொம்மாஜிகுளம் போலீஸ் சோதனைச்சாவடியில் பொன்னேரி உதவி கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது கும்மிடிப்பூண்டி தாசில்தார் கண்ணன் உடன் இருந்தார். மேலும் அங்கு உள்ள போலீசாரின் சோதனைச்சாவடியிலும் அப்போது அவர் ஆய்வு நடத்தினர்.


Next Story