நின்றிருந்த பஸ் மீது ஆட்டோ மோதியது
சிவகங்கை அருகே நின்றிருந்த பஸ் மீது ஆட்டோ மோதியது. இதில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.
சிவகங்கை
சிவகங்கையை அடுத்த இலந்தங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் வஞ்சிநகரத்தில் உள்ள உறவினர்கள் இல்ல விழாவில் கலந்துகொள்ள சக்கந்தி வழியாக ஒரு ஷேர் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை கருப்பு என்பவர் ஓட்டிச் சென்றார். சிவகங்கை அடுத்த சக்கந்தி அருகே சென்ற போது அங்கே நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்புறம் ஆட்டோ மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த புஷ்பம், பாக்கியம், கலையரசி, கயல்விழி, அகல்யா ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story