திருவள்ளுவர் சிலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது


திருவள்ளுவர் சிலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
x

தமிழக-கேரள எல்லையில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தமிழக-கேரள எல்லையில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தடுப்பு சுவர்

கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அப்போது பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையான கோபாலபுரத்தில் 4 வழிச்சாலையின் நடுவில் திருவள்ளுவருக்கு ஆள்உயர சிலை அமைக்கப்பட்டது. மேலும் சிலை உள்ள பகுதியை சுற்றி தடுப்பு சுவர், கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சி பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது சிலையின் அருகில் உள்ள தடுப்பு சுவர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. இதனால் கம்பி நடுரோட்டில் வந்து விழுந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரோட்டில் கிடந்த கம்பியை அகற்றினர். இதன் காரணமாக விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சீரமைப்பு பணிகள்

திருவள்ளுவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் கோவையில் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக-கேரள எல்லையில் உள்ள ஏதாவது ஒரு சாலையில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் பெரும் போராட்டத்திற்கு பிறகு கோபாலபுரத்தில் பாலக்காடு ரோட்டின் நடுவில் திருவள்ளுவருக்கு அரசு சிலை அமைக்கப்பட்டது.மேலும் அந்த பகுதி மட்டும் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் மழையின் காரணமாக தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதனால் சிலைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மீண்டும் தடுப்பு சுவர் அமைத்து, பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு சிலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை புதுபொலிவுடன் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story