கரடி கடித்து விவசாயி படுகாயம்


கரடி கடித்து விவசாயி படுகாயம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:57 AM IST (Updated: 15 Jun 2023 12:06 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் கரடி கடித்து விவசாயி படுகாயம் அடைந்தார்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்கு கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை கல்வராயன்மலை மேல்பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தன் (வயது 40) என்பவர் தனக்கு சொந்தமான வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த கரடி ஒன்று கோவிந்தனை கடித்துக் குதறியது. இதில் அவர் வலியால் அலறி துடித்தார். இதைகேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டியதுடன், பலத்த காயமடைந்த கோவிந்தனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கல்வராயன்மலை கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story