பெட்டிக்கடையை உடைத்து கரடி அட்டகாசம்


பெட்டிக்கடையை உடைத்து கரடி அட்டகாசம்
x
தினத்தந்தி 16 July 2023 1:45 AM IST (Updated: 16 July 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

பெட்டிக்கடையை உடைத்து கரடி அட்டகாசம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கட்டப்பெட்டு கிராமத்தில் இருந்து ஒன்னோரை செல்லும் பகுதியில் உள்ள போஜன் என்பவரது பெட்டிக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி அங்கிருந்த உணவு பொருட்களை தின்று அட்டகாசம் செய்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் அதே பகுதியில் தொடர்ந்து உலா வரும் கரடி, பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

1 More update

Related Tags :
Next Story