ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு முறையை ரத்து செய்ய கோரிக்கை


ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு முறையை ரத்து செய்ய கோரிக்கை
x

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுவினியோக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல்:

தமிழ்நாடு பொதுவினியோக ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட புனரமைப்பு கூட்டம், கொடைக்கானலில் உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் குமரிசெல்வன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் தங்கவேல், பொருளாளர் ராமமூர்த்தி, கொடைக்கானல் வட்டார தலைவர் மாரிமுத்து உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், பொது வினியோக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி மற்றும் சிறப்பு திட்டங்களுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட நிதி பலன்களை வழங்க வேண்டும். ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் பொதுவினியோகத்திற்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கும், மீனவர் கூட்டுறவு சங்கத்தின்கீழ் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கும் சட்ட வரைமுறைகளை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.



Next Story