பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்
கோவிலில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை பழமலை நகரில் நரிக்குறவர் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள செல்வசக்தி விநாயகர் கோவில், குழந்தை வீரகாளி அம்மன் தர்ம முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். நேற்று நரிக்குறவர் சமுதாய மக்கள் ஏராளமானோர் பால்குடம், பறவை காவடி, வேல் காவடி 21 வகையான அக்னி சட்டி எடுத்து சிவகங்கை தெப்பக்குளத்தில் இருந்து பழமலை நகர் வரை ஊர்வலமாக சென்றனர். இதில் 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்கள் பங்கேற்றனர். பின்னர் கோவிலில் சென்று வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story