காட்டெருமை சாவு
எஸ்.புதூர் அருகே காட்டெருமை இறந்து கிடந்தது.
சிவகங்கை
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள கொண்டபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கன். இவருடைய தோட்டத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்த அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சதாசிவம், எஸ்.புதூர் வனவர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், புழுதிபட்டி உதவி கால்நடை மருத்துவர் கார்த்தி இறந்த காட்டெருமையை உடற்கூறாய்வு நடத்தினார். 12 வயதான இந்த காட்டெருமை வயது முதிர்வு காரணமாக இறந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அந்த காட்டெருமையின் உடல் அங்கேயே புதைகை்கப்பட்டது.
Related Tags :
Next Story