காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்


காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை அருகே வனப்பகுதியில் இருந்து தப்பி நகர பகுதிக்கு வந்து சுற்றித்திரிந்த காட்டெருமையை வனத்துறையி னர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

ஊருக்குள் புகுந்த காட்டெருமை

கோவை வனப்பகுதியில் காட்டெருமை, யானை, புள்ளிமான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தடாகம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை சாலைப்பகுதியை கடந்து சரவணம்பட்டி கீரணத்தம், சகாரா சிட்டி பகுதியில் புகுந்தது. பின்னர் வினாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை சுற்றி திரிந்தது.

குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமை சுற்றித்திரிவதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மாவட்ட வனத்துறை அதிகாரி அருண்குமார் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் அந்த காட்டெருமையை கண்காணித்து வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் கோவையை அடுத்த மயிலம்பட்டி அருகே காட்டெருமை சுற்றி வந்தது தெரியவந்தது.

மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

இதனால் அங்கு சென்று முகாமிட்ட குழுவினர், காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதனால் காட்டெருமை சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதைத் தொடர்ந்து அதனை லாரியில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அது மயக்கம் தெளிந்தவாறு திமுறியது.

இருப்பினும் அதனை லாவகமாக பிடித்து கட்டுப்படுத்தி தடாகம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் கூறும்போது, 3 நாட்களாக காட்டெருமையை பிடித்து வனத்துக்குள் அனுப்பும் முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால் தமிழக வனத்துறை உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனத்துக்குள் கொண்டு சென்று விட்டோம். இவ்வாறு அவர்கூறினார்.


Next Story