எரியும் கொள்ளிக்கட்டையை பூசாரி விழுங்கும் வினோத நிகழ்ச்சி

எரியும் கொள்ளிக்கட்டையை பூசாரி விழுங்கும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
மணமேல்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே மாந்தாங்குடி கிராமத்தில் அக்கினி காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 15-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பால்குடம், காவடி, கரகம், மதுக்குடம் மற்றும் மதலை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் பூசாரியான மாரிமுத்து என்பவர் பெண் வேடம் அணிந்து சாமி ஆடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
அப்போது எரியும் கொள்ளிக்கட்டையை வாயில் வைத்து கடித்து அதிலிருந்த நெருப்பு கங்கு விழுங்கும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் காலில் நெருப்பை தேய்த்தும், தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.






