வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜனதாவினர்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தை பா.ஜனதா ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது பல்வேறு ஊர்களில் பா.ஜனதா நிர்வாகிகள் பெயரை வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் நீக்கி உள்ளனர். எனவே நீக்கியதற்கான காரணம் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் நீக்கப்பட்டவர்களின் பெயர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்து தர வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story