குளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது


குளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 30 Jun 2022 7:57 PM IST (Updated: 30 Jun 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே குளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு மந்தை குளத்தில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் இருந்து உடலை மீட்டனர். அதன்பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஊராளிபட்டியை சேர்ந்த காளிமுத்து (வயது 48) என்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 25-ந் தேதி ஊராளிபட்டியில் உள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி உள்ளனர். எனவே காளிமுத்து குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story