'மெய்யறம்' நூலை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்


மெய்யறம் நூலை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 11 May 2023 12:45 AM IST (Updated: 11 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வ.உ.சிதம்பரனார் சிறையில் இருந்தபோது எழுதிய ‘மெய்யறம்' என்ற நூலை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோவையில் நடந்த சிலை திறப்பு விழாவில் அவரது பேத்தி வலியுறுத்தினார்.

கோயம்புத்தூர்

கோவை

வ.உ.சிதம்பரனார் சிறையில் இருந்தபோது எழுதிய 'மெய்யறம்' என்ற நூலை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோவையில் நடந்த சிலை திறப்பு விழாவில் அவரது பேத்தி வலியுறுத்தினார்.

வ.உ.சிதம்பரனார் சிலை

கோவை வ.உ.சி. மைதானத்தில் ரூ.40 லட்சத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு 7 அடி உயரத்தில் வெண்கல முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. அப்போது சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சிலையை திறந்து வைத்தார்.

இதையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலையின் கீழ்ப்பகுதியில் அவருடைய உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேயர் கல்பனா, பொள்ளாச்சியில் வசித்து வரும் வ.உ.சிதம்பரனாரின் பேத்தி மரகத மீனாட்சி ராஜா உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் வ.உ.சிதம்பரனாரின் பேத்தி மரகத மீனாட்சி ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

'மெய்யறம்' நூல்

நமது நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய எனது தாத்தா செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு வெண்கலத்தில் முழு உருவ சிலை அமைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது தாத்தா சிறையில் இருந்தபோது 'மெய்யறம்' என்ற நூலை எழுதினார். இந்த நூல் ஆத்திச்சூடி போன்று ஒரு வரியில் உயர்ந்த கருத்துகளை கூறக்கூடியது. அந்த நூல் மக்களுக்கு சென்று சேரும்போது, எனது தாத்தா தனது தமிழ் புலமையைகூட மக்களுக்கு செலவழித்தார் என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்

எனவே இந்த நூலை பள்ளி குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும். இதற்காக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள் மீனாலோகு, கதிர்வேல், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம் மற்றும் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story