சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
கோவை
கோவையில் சிகரெட் புகைத்ததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
தந்தை கண்டித்தார்
கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுவன். இந்த சிறுவனுக்கு புகையிலை பொருட்கள், சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுவன் சவுரிபாளையம் அருகே நின்று கொண்டு சிகரெட் புகைத்துள்ளான். இதை அந்த வழியாக சென்ற அவரது தந்தை பார்த்துள்ளார். மகன் சிகரெட் பிடிப்பதை பார்த்து வேதனையடைந்த அவர் மகனை கண்டித்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வெளியேசென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.
தற்கொலை
இதனால், சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மகன் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதைப்பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுத அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகரெட் புகைத்ததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.