நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு சிறுவன் சாவுதாரமங்கலத்தில் பரிதாபம்


நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி  5-ம் வகுப்பு சிறுவன் சாவுதாரமங்கலத்தில் பரிதாபம்
x
சேலம்

தாரமங்கலம்

நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி 5-ம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

5-ம் வகுப்பு சிறுவன்

தாரமங்கலம் நகராட்சி 3-வது வார்டு கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்- மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு 3 மகள்களும், சபரிவாசன் (11) என்ற மகனும் இருந்தனர். சபரிவாசன், பாரக்கல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை தினம் என்பதால் நண்பர்களுடன் அங்குள்ள ஒரு தோட்டத்து கிணற்றுக்கு நீச்சல் பழக சென்றான். கிணற்றில் இறங்கி நண்பர்களுடன் நீச்சல் பழகி கொண்டிருந்தான். மாலை 5 மணி ஆகியும் சபரிவாசன் வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவனை தேடி உள்ளனர்.

உடல் மீட்பு

இதற்கிடையே சபரிவாசன் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக நண்பர்கள் கூறவே, அவனை கிணற்றில் இறங்கி தேடினர். நங்கவள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சிறுவன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு சபரிவாசன் உடல் இரவு 9 மணி அளவில் மீட்கப்பட்டது. சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிறுவன் சபரிவாசன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.


Next Story