கிருஷ்ணகிரி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு


கிருஷ்ணகிரி அருகே  டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு
x

கிருஷ்ணகிரி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிறுவன்

கிருஷ்ணகிரி அருகே உள்ள பனமுட்லு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தினேஷ் (வயது 16). சம்பவத்தன்று சிறுவன் கிருஷ்ணகிரியில், வேப்பம்பட்டி மங்கம்மா கோவில் சாலை வழியாக வந்த ஒரு டிராக்டரில் ஏறி சென்றான்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென டிராக்டர் தாறுமாறாக ஓடியது. இதில் சிறுவன் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தான். அப்போது டிராக்டர் சக்கரம் சிறுவன் மீது ஏறியது. இந்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்தான்.

பரிதாப சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story