பாலாற்று தடுப்பணையில் மூழ்கி சிறுவன் சாவு


பாலாற்று தடுப்பணையில் மூழ்கி சிறுவன் சாவு
x

பாலாற்று தடுப்பணையில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

காஞ்சிபுரம்

நீரில் மூழ்கினார்

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, பழைய சீவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சாமுவேல் வயது 16. இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நண்பர்கள் சிலருடன் பழையசீவரம் பாலாற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த நிலையில் சாமுவேல் திடீரென நீரில் மூழ்கி மாயமாகி விட்டான்.

உடல் மீட்பு

சாமுவேல் நீரில் மூழ்கி காணாமல் போனது குறித்து நண்பர்கள் ஓடிச் சென்று கிராமத்தில் தெரிவித்த நிலையில், கிராம மக்கள் ஓடி வந்து தடுப்பணையில் தீவிரமாக தேடினர். நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story