சிறுவன் திடீர் மாயம்
கச்சிராயப்பாளையம் அருகே சிறுவன் திடீர் மாயமானான். அவனை யாரேனும் கடத்தி சென்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே அக்கராயாப்பாளையம் பொட்டியம் சாலை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு பர்வேஷ் (வயது 8), தருண்ஆதித்யா (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லோகநாதன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வீட்டில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு அவர் எழுந்து பார்த்தபோது, தருண் ஆதித்யாவை காணவில்லை. இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று தருண்ஆதித்யாவை தேடினார். இருப்பினும் சிறுவன் கிடைக்கவில்லை. இது குறித்த தகவலின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது சிறுவன் வீட்டை சுற்றி, சுற்றி வந்தது நின்றது. தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றில் தேடினர். இருப்பினும் சிறுவன் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் எங்கு சென்றான். அவனை யாரேனும் கடத்தி சென்றார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.