ரிஷிவந்தியம் அருகே வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடி-உதை: போலீஸ் விசாரணை
ரிஷிவந்தியம் அருகே வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்தவர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு ரோடு அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் அய்யப்பன் (வயது 19). இவர் பகண்டைகூட்ரோட்டில் உள்ள மெஸ்சில் வேலை பார்த்து வருகிறார். அய்யப்பன், தன்னிடம் இருந்த சிம் கார்டு ஒன்றை பொற்பாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் என்பவரிடம் கொடுத்துள்ளார். அந்த சிம்கார்டு எண்ணுக்கு மையனூரை சேர்ந்த அருணாச்சலம் மகன் ஆகாஷ் என்பவர் போன் செய்துள்ளார். அப்போது பேசிய குபேந்திரனுக்கும், ஆகாஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டியுள்ளனர்.
அய்யப்பன் தான் தன்னை திட்டியதாக எண்ணி, அவரை மையனூர் வனப்பகுதிக்கு ஆகாஷ் இழுத்து சென்று, தைலமரத்தில் கட்டி வைத்து, தாக்கி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த அய்யப்பன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஆகாஷ் மீது பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.