ஆழியாறு அணையின் மதகை இயக்கிய சிறுவன்


ஆழியாறு அணையின் மதகை இயக்கிய சிறுவன்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையின் மதகை சிறுவன் இயக்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையின் மதகை சிறுவன் இயக்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆழியாறு அணை

பி.ஏ.பி. திட்டத்தின் முக்கியமான அணையாக கருதப்படும் ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய ஆயக்கட்டில் 6 ஆயிரத்து 400 ஏக்கர், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் கேரளாவுக்கு ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி பி.ஏ.பி. திட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினம் இரவு அணையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. மின்விளக்குகள் அலங்காரத்தில் அணை ஜொலித்தது. அப்போது சிறுவன் ஒருவன் மதகை இயக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பழுது சீரமைப்பு

இதற்கிடையில் சிறுவன் மதகை இயக்கிய போது, ஸ்டார்டர் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் மதகை உடனடியாக மூட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அங்கு பணியில் இருந்த ஊழியர்களை கொண்டு மதகு மூடப்பட்டது. பின்னர் என்ஜினீயர் வரவழைக்கப்பட்டு ஸ்டார்டர் பழுது சரிசெய்யப்பட்டது.

ஏற்கனவே பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் வீணாகுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதற்கிடையில் இது போன்ற செயல்களால் மதகை இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க கூடாது. அணை பாதுகாப்பு பணிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story