சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
சரவணம்பட்டி
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கீரணத்தம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் தொண்டாமுத்தூரை அடுத்த நரசிபுரம் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (20) என்பவர் அந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்சிறுமியை மதன் குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்
மேலும் இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். ஆனால் இது குறித்து சிறுமி தனது அத்தையிடம் தெரிவித்ததை தொடர்ந்து மாணவியின் அத்தை கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக மதன் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.