செல்போன் திருடிய சிறுவன், முதியவர் கைது


செல்போன் திருடிய சிறுவன், முதியவர் கைது
x

செல்போன் திருடிய சிறுவன், முதியவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி குண்டூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்(வயது 63). இவர் காந்தி மார்க்கெட் அஞ்சுமன் பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், முனியம்மாளிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடினான். இதனால் அதிர்ச்சியடைந்த முனியம்மாள் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த சிறுவனை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

இதேபோல் திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல்(57). இவர் சம்பவத்தன்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த பாலு (60) என்பவர், வடிவேலுவின் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. அக்கம், பக்கத்தினர் அவரை கையும், களவுமாக பிடித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Next Story