ஆற்றில் மூழ்கி புதுப்பெண் சாவு
ஆற்றில் மூழ்கி புதுப்பெண் சாவு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலகண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் சிவா. கூலித்தொழிலாளி. இவருக்கும், திருத்துறைப்பூண்டி தாலுகா ஓவரூரை சேர்ந்த ரகுபதி மகள் சுகந்திக்கும்(வயது22) கடந்த 23-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது. நேற்று மதியம் 3 மணி அளவில் சுகந்தி ஊருக்கு அருகில் உள்ள அய்யனார் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுகந்தியை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிேசாதனை செய்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் ஆற்றில் மூழ்கி புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.