புதுபொலிவு பெறும் ரெயில்வே மேம்பாலம்
புதுபொலிவு பெறும் ரெயில்வே மேம்பாலம்
உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக்பள்ளி வைரவிழாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதையொட்டி உடுமலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர்களில் வர்ணம் பூசும்பணிகள் மற்றும் சாலையோரம் உள்ள மரங்களில் ஒளி பிரதிபலிப்பான் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக்பள்ளி தொடங்கப்பட்டு 60ஆண்டுகள் ஆனதையொட்டி வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் வைரவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்து கொள்ள உள்ளார்.இதற்காக 15-ந் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிமுடிந்ததும், அவர் உடுமலை வழியாக திருமூர்த்திமலைக்கு செல்கிறார். இரவு அங்கு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அடுத்த நாள் 16-ந் தேதி காலைஅமராவதி நகர் சைனிக்பள்ளி வைரவிழாவில் கலந்து கொள்வதற்காக அமராவதி நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.விழா முடிந்ததும் உடுமலை, பல்லடம் வழியாக கோவைக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு செல்கிறார்.
மேம்பாலத்திற்கு வர்ணம்
முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஒவ்வொரு அரசு துறை அதிகாரிகளும், அந்தந்த துறை சம்பந்தப்பட்ட பணிகளைத்தொடங்கியுள்ளனர்.அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், உடுமலை காந்தி சதுக்கத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம், புதுப்பொலிவு பெரும் வகையில், மேம்பாலத்தின் இரண்டு புறமும் உள்ள தடுப்பு சுவர்களில் கருப்பு, வெள்ளை வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அத்துடன் உடுமலையில் இருந்துதிருமூர்த்திமலை,
அமராவதி நகர் மற்றும் உடுமலை-பல்லடம் சாலை பகுதிகளில் நெடுஞ்சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களில், சாலைப்பணியாளர்கள் ஒளி பிரதிபலிப்பானை பொருத்தி வருகின்றனர்.