தொழிலாளியை கொன்ற அண்ணன்
வத்திராயிருப்பு அருகே சம்பளம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ெதாழிலாளியை அண்ணன் கொலை செய்தார்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே சம்பளம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ெதாழிலாளியை அண்ணன் கொலை செய்தார்.
சம்பளம் பிரிப்பதில் தகராறு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலப்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியகருப்பி (வயது 70). இவரது மகன்கள் கணேசன் (57), ஆறுமுகம் (55). கூலி தொழிலாளிகள்.
பெரியகருப்பி, தனது இளைய மகனுடன் கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பள பணத்தினை பிரிக்கும் போது பெரியகருப்பிக்கும், ஆறுமுகத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் வத்திராயிருப்பு சுப்பராயர் தெருவில் சம்பள பணத்தினை பிரிக்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொழிலாளி கொலை
அப்போது அந்த வழியாக வந்த கணேசன், ஆறுமுகத்தை சத்தம் போட்டு விலக்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் ஆறுமுகம், கணேசனை கம்பால் தாக்க முயன்றுள்ளார். அப்போது கணேசன் கம்பை பிடுங்கி ஆறுமுகத்தின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆறுமுகம் மயங்கி கீழே விழுந்துள்ளார். ரத்த காயங்களுடன் கீழே விழுந்த அவரை பார்த்த கணேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பெரியகருப்பி, ஆறுமுகத்தினை ஆட்டோவில் ஏற்றி வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.