விவசாயியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்ணன்- தம்பி
நிலப்பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்ணன்- தம்பி மீது கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரிமங்கலம்:-
காரிமங்கலத்தை அடுத்த மேல் கொள்ளுபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது65), விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அண்ணன்- தம்பியான குப்பன், சண்முகம் ஆகியோருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த குப்பன், சண்முகம் இருவரும் தாங்கள் வளர்த்த நாயை ஏவி கிருஷ்ணமூர்த்தியை கடிக்க வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி போலீசில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி பாலக்கோடு கோர்ட்டில் வாக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணமூர்த்தியை நாயை விட்டு கடிக்க செய்ய அண்ணன்- தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து காரிமங்கலம் போலீசார் குப்பன், சண்முகம் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.