ரெயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரால் பஸ் பழுதாகி நின்றது


ரெயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரால் பஸ் பழுதாகி நின்றது
x

மொடக்குறிச்சி அருகே பலத்த மழை பெய்தது. இதனால் ரெயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரால் பஸ் பழுதாகி நின்றது. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

ஊஞ்சலூர்:

மொடக்குறிச்சி அருகே ஈரோடு- கரூர் மெயின் ரோட்டில் ஆரியங்காட்டு புதூர் என்ற இடத்தில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ரெயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் அருகில் உள்ள பகுதியில் இருந்து மழைநீரும் இங்கு வந்து சேர்ந்தது. இதன்காரணமாக ரெயில்வே நுழைவு பாலத்தில் 4 அடி உயரத்துக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து கரூருக்கு செல்லும் தனியார் பஸ் ஒன்று இரவு 9 மணி அளவில் ரெயில்வே நுழைவு பாலத்தின் வழியாக சென்றது. அப்போது அங்கு அதிகமாக தேங்கி நின்ற மழைநீரால் பஸ் பழுதாகி நின்றது. இதனால் ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். பின்னர் 1 மணி நேரத்தில் பஸ்சில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.


Related Tags :
Next Story