பஸ் உரிமையாளரை தாக்கி நகை, செல்போன் பறிப்பு


பஸ் உரிமையாளரை தாக்கி நகை, செல்போன் பறிப்பு
x

பஸ் உரிமையாளரை தாக்கி நகை, செல்போன் பறிப்பு

திருவாரூர்

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் மோட்டார்சைக்கிளில் சென்ற பஸ் உரிமையாளரை தாக்கி நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பஸ் உரிமையாளர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் விவேக் (வயது31). இவர் தனியார் பஸ் உரிமையாளர். நேற்று விவேக் தனது மோட்டார்சைக்கிளில் இடும்பாவனத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

நகை, செல்போன் பறிப்பு

அப்போது கீழநம்மங்குறிச்சி திரும்பும் இடத்தில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் விவேக்கை வழிமறித்தனர். பின்னர் அவரை தாக்கி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், விலை உயர்ந்த செல்போன், ரூ.ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் விவேக் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் உரிமையாளரிடம் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகி்ன்றனர்.


Next Story