பஸ் படிக்கட்டில் பயணிக்கும்மாணவர்கள் மீது நடவடிக்கை


தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பகுதியில் பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று நடந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பகுதியில் பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று நடந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி பகுதியில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள், பொதுமக்கள் தொங்கிக் கொண்டு பயணிப்பதை தடுக்க மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுரைப்படி, கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

உதவிகலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வீருகாத்தான், வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், தாசில்தார் சுசிலா, போக்குவரத்து பிரிவு, சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர், மினி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

கூட்டத்தில் ேபாலீஸ் துணை சூப்பிரண்டு கூறுகையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் படிக்கட்டிலோ அல்லது தொங்கிக் கொண்டோ ஆபத்தான பயணம் செய்வதை அனுமதிக்க கூடாது என ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பஸ் உரிமையாளர்கள் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

இதை மீறி பஸ் படிக்கட்டில் பயணம் செய்பவர் கள் இறங்க மறுத்தாலோ, அல்லது உள்ளே ஏறி வர மறுத்தாலோ போலீசாருக்கு தகவல் கொடுத்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர் காலை- மாலை வேலைகளில் போலீஸ் துறை, போக்குவரத்து துறை மற்றும் கல்லூரி நிர்வாகங்களின் சார்பில் கல்லூரி தன்னார்வலர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைத்து பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்களை ஒழுங்கு படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

கூடுதல் பஸ்கள் இயக்க..,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், எந்தெந்த கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ் வசதிதேவைக்கு ஏற்ப இயக்கப்படும்.

இது தொடர்பாக தினமும் கண்காணிக்கப்படும், என்றார்.


Related Tags :
Next Story