தீக்குளித்த தொழிலதிபர் சாவு


தீக்குளித்த தொழிலதிபர் சாவு
x

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்த தொழிலதிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர்

கடலூர் முதுநகர் சராங்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரம் மகன் விருத்தகிரி (வயது 43). தொழிலதிபர். இவர் கடந்த 6-ந்தேதி இரவு 10 மணி அளவில் கடலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து, திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் அலறி துடித்த அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சாவு

இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், விருத்தகிரி தீபாவளி சீட்டு நடத்தி வந்ததும், சீட்டு போட்ட நபர்களுக்கு வழங்குவதற்காக முன்கூட்டியே வீட்டில் வாங்கி வைத்திருந்த 2 கிராம் கொண்ட 44 தங்க காசுகள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள மளிகை சாமான்கள், ரூ.15 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், தளவாட சாமான்கள் ஆகியவற்றை அவரது சகோதரர்கள், சகோதரி, மைத்துனர் ஆகியோர் கொள்ளையடித்து சென்று விட்டதாகவும், அந்த பொருட்களை மீட்டுத்தந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தீக்குளித்தது தெரிந்தது.

இதனிடையே, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த, விருத்தகிரி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story