ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து, அதில் வந்த 19 பக்தர்கள் படுகாயம்


ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து, அதில் வந்த 19 பக்தர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 18 Sept 2023 2:30 AM IST (Updated: 18 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து, அதில் வந்த 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து, அதில் வந்த 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

வேன் கவிழ்ந்தது

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கதிரையன்குளத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பழனி அருகே நெய்க்காரப்பட்டி மடப்புரத்தில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு நேற்று சாமி கும்பிட சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அதே வேனில் கதிரையன்குளத்துக்கு திரும்பினர். அந்த வேனை கதிரையன்குளத்தை சேர்ந்த சேவுகப்பெருமாள் (வயது 30) என்பவர் ஓட்டினார்.

பழனி-ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் பெரிய கரட்டுப்பட்டி பிரிவு அருகில் அந்த வேன் வந்தது. அப்போது அந்த வேனின் பின்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் அந்த சாலையின் நடுவே கவிழ்ந்தது. அந்த நேரத்தில் முன்னும், பின்னும் வாகனங்கள் எதுவும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

19 பேர் படுகாயம்

இருப்பினும் இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த சேவுகப்பெருமாள் மற்றும் வேனில் வந்த மணிவேல் (40), முனீஸ்வரன் (30), ஜெகதீஸ்வரி (30), சசி (14), ஈஸ்வரி (50), வீரபாண்டி (7), பத்ரகாளி (22), வேலம்மாள் (43) உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகுமாரசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story