தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு முடித்து வைத்தது.

மதுரை,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அரசு அமைத்தது. நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணையை முடித்து சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டபோது, அந்த ஆணையத்தை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் அர்ஜூனன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story