தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் குறித்த வழக்கு: நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் குறித்த வழக்கு:  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பங்கேற்பது பற்றிய வழக்கில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

தகுதி தேர்வு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமல்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஆசிரியராக பணியாற்றும் நான், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளேன். பல்வேறு அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடத்திற்கான உரிய தகுதிகளை நான் கொண்டிருக்கிறேன்.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் வகையில் மாநில அளவிலான பொது கலந்தாய்வு நடக்க உள்ளது. இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற என்னைப் போன்றவர்களின் வாய்ப்பு பறிபோகிறது. எனவே எனக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கொள்கை முடிவு

தகுதியானவர்களைக் கொண்டு பதவி உயர்வுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

மனுதாரர் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளித்து, 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்தக் கூடாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story