விடிய விடிய பெய்த மழையால் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது


விடிய விடிய பெய்த மழையால் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது
x

திருப்பத்தூர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் பொம்மிகுப்பம் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. ஆண்டியப்பனூர் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் பொம்மிகுப்பம் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. ஆண்டியப்பனூர் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விடிய விடிய மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தொடங்கிய மழை தொடர்ந்து விடிய விடிய பெய்தது.

மழை காரணமாக திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட தார் சாலை, அண்ணா நகர், கலைஞர் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. பல்வேறு தெருக்கள் சேறும் சகதியுமாக காணப்பட்டது திருப்பத்தூர் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகரித்து உள்ளது.

ஆண்டியப்பனூர் அணை

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேறி வருகிறது. ஆண்டியப்பனூர் நீர்வரத்து கால்வாய்கள் இருக்கும் பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தாலுகா கொரட்டி பகுதியில் இருந்து தண்டுக்கானூர் மற்றும் தண்டுக்கானூர் காலனி பகுதியில் செல்லும் பாம்பாறு கிளை ஆறு தலைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதேபோன்று பொம்மிகுப்பம் கிராமத்திலிருந்து ஏழருவி, பழந்தோட்ட பகுதிக்கு செல்லும் தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

மழையில் நனைந்து சேதம்

திருப்பத்தூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டை, பருப்பு பொருட்கள் மழையில் நனைந்து சேதமானது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி திருப்பத்தூரில் 64 மில்லிமீட்டர் மழை பதிவானது.

பலத்த மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story