கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணைக்கு வந்தது


கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணைக்கு வந்தது
x

கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் மேட்டூர் அணை வந்தடைந்தது. வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது.

சேலம்

மேட்டூர்:

காவிரி தண்ணீர்

கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் கடந்த 23-ந் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணை வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் வந்தது

அதாவது நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 119 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது, இரவு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நேற்று காலை முதல் கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்னும் ஒரு சில நாட்களில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் உயர வாய்ப்பு

வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணை வந்தடையும் போது,

அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்காவிட்டால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 66.86 அடியாக இருந்தது.

1 More update

Next Story