தனித்தனியாக கிராம சபை கூட்டத்தை நடத்திய தலைவர், துணைத்தலைவர்
அத்திமலைப்பட்டில் தனித்தனியாக கிராம சபை கூட்டத்தை தலைவர், துணைத்தலைவர் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த அத்திமலைப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், காரமலை பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடத்தினார். இதில் 100 நாள் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் துணைத்தலைவர் ரமேஷ் மேட்டுக்குடிசையில் உள்ள கங்கையம்மன் கோவிலில் கிராம சபை கூட்டம் நடத்தினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா கலந்துகொண்டார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு உறுப்பினர்கள் 5 பேர், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா கூறுகையில், கிராம சபை கூட்டம் ஊருக்குள் நடத்த வேண்டும். தலைவர் சங்கர் ஏன் ஊருக்கு வெளியே கிராம சபை கூட்டம் நடத்தினார் என்பது தெரியாது. எனவே ஊருக்குள் துணைத்தலைவர் ரமேஷ் நடத்திய கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பார்வையிட்டேன்' என்றார்.