தபால் ஊழியருக்கு அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகை திரும்பி வந்தது


தபால் ஊழியருக்கு அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகை திரும்பி வந்தது
x

தபால் ஊழியருக்கு அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகை திரும்பி வந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் துறைமங்கலம் துணை அஞ்சல் நிலையத்தின் கீழ் செயல்படும் கோனேரிப்பாளையம் கிளை தபால் நிலையத்தில், கிளை அஞ்சலக அலுவலராக பணியாற்றினார். இந்நிலையில் கோனேரிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மத்திய அரசின் அஞ்சல் அலுவலகத்தை நம்பி பல்வேறு சேமிப்பு திட்டங்களில் சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை தவணை முறையில் சின்னதுரையிடம் கட்டி வந்தனர். அதில் சின்னதுரை லட்சக்கணக்கில் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதன்பேரில், ஸ்ரீரங்கம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கோட்ட துணை ஆய்வாளரால் பதிவு தபால் மூலம் குற்றப்பத்திரிகையை சின்னதுைர வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதனை பட்டுவாடா செய்ய முடியாததால், அந்த குற்றப்பத்திரிகை திருப்பி அனுப்பப்பட்டது. குற்றப்பத்திரிகை வெளிவந்த 15 நாட்களுக்குள், அதனை சின்னதுரை பெற்று, அடுத்தகட்ட விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விஜயா தெரிவித்துள்ளார்.


Next Story