தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குத்தாலம்:
தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சராக பொறுப்பேற்று தி.மு.க அரசு அமைந்து இரண்டு ஆண்டு நிறைவு பெற்று மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று (வியாழக்கிழமை) மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மயிலாடுதுறை மாவட்ட எல்லையான குத்தாலம், திருவாவடுதுறை சோதனை சாவடி பகுதி அருகே மாலை 3.30 மணியளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், சார்பு அணியினர்,மகளிர் அணியினர் உள்ளிட்ட இயக்கங்களை சார்ந்த அனைவரும் இதில் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






