முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் மாதனூர் ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

மாதனூர் ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் மாதனூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணி அளவில் ஆம்பூருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, தி.மு.க. தலைமை மற்றும் கட்சி தலைவர்களை அவதூறாக பேசி வரும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிப்பது, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மூடப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாதனூர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story