முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று தொடக்கம்


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று தொடக்கம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் நடைபெற்று வரும் அரசின் வரலாற்று சாதனை திட்டமான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் முதற்கட்டமாக ஒரு சில பள்ளிகளில் தொடங்கப்பட்டது. அதன் ஒரு அங்கமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா ஒன்றியம் சென்னசமுத்திரம் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி அளவில் காலை உணவு திட்டத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது.

மாவட்டம் முழுவதும் இத்திட்டம் சிறப்பாக தொடங்கப்பட உள்ளது. இந்த விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் காலை 8 மணியளவில் திட்டத்தை தொடங்கி வைக்கவும், மற்ற இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story