குழந்தையை கணவர் கடத்தி சென்று விட்டார் - போலீசில் பெண் புகார்


குழந்தையை கணவர் கடத்தி சென்று விட்டார் - போலீசில் பெண் புகார்
x

குழந்தையை கணவர் கடத்தி சென்று விட்டார் என்று போலீசில் பெண் புகார் அளித்தார்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் பிரபாதேவி(வயது 33). இவரது கணவர் கண்ணதாசன் ஆட்டோ டிரைவாக உள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரபாதேவி, அவருடைய கணவர் கண்ணதாசன் பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகின்றனர்.. இவர்களுக்கு இடையிலான விவாகரத்து வழக்கு திருமங்கலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் கண்ணதாசன் குழந்தையை பார்க்க வந்தால் பிரபாதேவி பார்க்க அனுமதிப்பது இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தனியார் பள்ளியில் படித்து வரும் மகளை கண்ணதாசன் அழைத்துக்கொண்டு சென்று விட்டார். இதையறிந்த பிரபாதேவி திருமங்கலம் டவுன் போலீசில், கணவர் குழந்தையை கடத்திச் சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story